இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆயிரங்காலத்துப் பயிரா?

”அப்றம் தம்பி எப்போ கல்யாணம் பண்ணப் போற?” ”சீக்கிறத்துல சோறு போடுப்பா” ”வாழ்க்கையில அடுத்த கட்டத்துக்கு வா நண்பா” ”நாங்க படுற கஷ்டத்த நீயும் அனுபவிக்க வேண்டாமா?” ”பருவத்தே பயிர் செய்யனும்டா” ”சீக்கிரமே கல்யாணம் பண்ணா தான் சர்வீஸ்ல இருக்கும் போதே பிள்ளைகளை செட்டில் பண்ண முடியும்”          நமது நாட்டில் முப்பது வயதைக் கடந்த அல்லது முப்பதை நெருங்கிய  திருமணம் ஆகாத எந்த ஒரு இளைஞரும் இந்த சொற்களை தங்கள் வாழ்க்கையில் எதிர் கொண்டே ஆக வேண்டும்.        பால் இனப்பெருக்கத்தின் மூலம்  மரபணுக்களைக் கடத்துகின்ற எல்லா உயிர்களிலும் ஆண்-பெண் சேர்க்கை என்பது இயல்பானது.           ஆனால் “திருமணம்”என்கிற அமைப்பு முறை மனித இனத்திற்கு மட்டுமே சொந்தமான ஒன்று. மனிதனுக்கும் அது இடைக்கால ஏற்பாடு தான். நவீன மனிதன் தோன்றி மூன்று இலட்சம் ஆண்டுகள் ஆவதாக ஆய்வுகள் சொல்கின்றன.  ஆனால் திருமணம் என்கிற அமைப்பு முறை தோன்றி சில ஆயிரம் ஆண்டுகள் தான் ஆவதாக மானிடவியல், வரலாற்றியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.       ...

அகண்ட தேசம் Aadhiran

அகண்ட தேசம் ~~~~~~~~~~~~~~~~ நினைத்தும் பார்த்தில்லை இந்தத் துயரம் எங்கள் தேசத்திற்கு வருமென்று. உலகத்தார் பலரைக் கொன்ற  கொடிய வைரஸ் எங்கள் இணை அதிபரையும் கொண்டு போனது. பத்தடுக்கு பாதுகாப்பெல்லாம் வைரஸுக்கு போதாதாமே! தேசத்திற்கு துயரென்றது மொத்த மக்களுக்குமல்ல, நூற்றுக்கு மூன்றெனும் விகிதமுள்ள எங்களுக்கு மட்டும் தான். ஈராயிரம் ஆண்டுகளாய்  ‘பூதேவர்கள்’ எனச்சொல்லி மொத்தமாய் அனுபவித்ததை மக்களாட்சி எனும் பெயரில் கொஞ்சூண்டு எடுத்ததையும் மீட்க வந்த மீட்பர் எங்கள் அதிபர். (மீட்பரல்ல அடிமை என்றழைக்கும் உங்களுக்கு வன்மையான கண்டனங்கள்) நல்லடக்கத்திற்கு பிறகான மூன்றாம் நாள். அதிபர் சிகிச்சை பெற்ற படுக்கையின் கீழ் அவர் எழுதிய கடிதமொன்று கிடைத்தது. “தொற்று கண்டறிந்த நான்காம் நாள் இன்று. செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்படுகிறது. இன்னும் மோசமடைகிறது மூச்சுத் திணரல்! மேடைதோறும் வெறுப்பை உமிழ்ந்த சொற்கள் உற்பத்தியான  எனது நாவின் தீமணம் தான் காரணம் என அறிய முடிகிறது. வலி தாழாமல் நான் கதறும் ஓசையோடு சேர்ந்து கேட்கிறது முன்பொரு நாள்  நான் பற்ற வைத்த கலவரத்தில் இந்த அடிமையின் அடிமையொருவன்...