இடுகைகள்

மாமன்னனும் யுகபாரதியும்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வடிவேலு  நடிக்கிறார், ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார், உதயநிதியின் கடைசி படம் என படம் அறிவிப்பு வெளியானது முதல்  சினிமா ரசிகர்கள் மத்தியில்  பெரிய எதிர்பார்ப்பை சுமந்து கொண்டே வந்த திரைப்படம் தான் மாமன்னன். ராசாக்கண்ணு பாடல் மற்றும் இசை  வெளியீட்டு விழாவில் தேவர் மகனை ஒப்பிட்டு பேசிய இயக்குனரின் பேச்சு ஆகியவை படம் வெளிவருவதற்கு முன்னரே சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியது. படம் வெளியாகி வணிக ரீதியான பெரிய வெற்றியைப் பெற்றதோடு மட்டுமல்லாமல் , மாரி செல்வராஜின் வழக்கமான படங்களைப் போல தமிழ் சமூகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும் மாமன்னன்  உருவாக்கி இருந்ததை நாம் அறிவோம். இதற்கிடையே படத்தில் ஜாதி, அதிகார வெறி கொண்ட ஒரு சைக்கோவாக காட்டப்பட்ட ரத்தினவேலு (பஹத் பாசில்) இடம்பெறும் காட்சிகளை தங்களின் வீர சாகசங்கள் போல சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து தங்கள் சாதி அரிப்பை தீர்த்துக் கொண்டனர் ஜாதி வெறியர்கள். சமீபத்தில் ஒரு அமைச்சர் தனது வீட்டில் பட்டியல் வகுப்பு MLA வை நிற்க வைத்து  உரையாடியது போன்ற புகைப்படம் வெளியான போது, சமூக வ...

அரசியல் சாசனம் - அருங்காட்சியா?

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதன்முதலாக நடைபெற்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் 1976 க்கு முந்தைய பதிப்பு (அதாவது முகப்புரையில் மதச்சார்பின்மை, சோசலிசம் உள்ளிட்ட சொற்கள் இணைக்கப்பட்டதற்கு முந்தையது) வழங்கப்பட்டது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அரசியல் சாசனம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டம் இயற்றும் இடத்தில் அமர்ந்துள்ள மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் மட்டும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு  நூல் என்று  தான் நாமெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்திய நிலப்பரப்பில் வாழ்கிற எவரும் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாய், இன்னதென்று அறியாவிட்டாலும் பிறப்பில் பேதம் கற்பிக்கும்  மனு ஸ்மிருதியைத் தான் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நடைமுறையிலும் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது. 'சாதிக்கொரு நீதி'  வழங்கும் மனு அநீதிக்கு மாற்றாக ' சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்று சமத்துவக் கோட்பாட்டை அடியிழையாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலமைப்பு சட்டம். ஆனாலும் 'தேர்தலில் வாக...

பயிர் பேசுது

 தலைநகரின் மருத்துவமனைகளில் பெருங்கூட்டம்! அய்யோ அம்மாவென்று அலறுகின்றன ஊடகங்கள்! அதிபர் துணைஅதிபர் ஆளுங்கட்சியினர் அத்தனை பேருக்கும் ஆளுக்கொரு நோயாம்! மருத்துவர்களின் பரிசோதனை அறிக்கைகள் வந்தன. அதிபருக்கானது முதலில்! “பெருங்குடலில் வேர்விட்டு வளர்கிறது தக்காளிச் செடியொன்று. அறுவைச் சிகிச்சை அவசியம்” -ஆதார விலையில்லாமல் மூடைமூடையாய் சாலையில் கொட்டப்பட்ட தக்காளிகளுக்கு நீதி கேட்கிறதாம் அச்செடி. அடுத்தது துணைஅதிபருக்கானது ! “சிப்ஸ் வகை கிழங்கை விளைவித்து ஒப்பந்தத்தை மீறிய பெருங்குற்றத்திற்காக கோடிரூபாய் இழப்பீடு கேட்டு கோர்ட்டுக்கு இழுத்தபோது என்ன செய்தார்?” சிறுகுடலை இடைமறித்து நின்று கேட்கிறதாம் உருளைச் செடியொன்று.. அடுத்து அமைச்சர்களுக்கானது! மொடமொடவென்று உடுத்திய பருத்தியாடைகளின் நூலிழைகள் வியர்வை நாளங்களின் வழியே உட்புகுந்துள்ளனவாம் வேர்விட்டு முளைப்பதற்காய்! -வட்டிக்கு குட்டிபோடும் நிதிநிறுவனங்களின் மூலம் தற்கொலைக்குள்ளான விவசாயிகள் சார்பாக அவை கேட்கின்றன மறுக்கப்பட்ட நீதியை.. தொடர்ந்து கூட்டணிக் கட்சியினருக்கானது- “நாலுபோகம் வெளஞ்ச நிலம் வரண்டு போகக் காரணமான, குளிர்பானக் கம்...

சாதிப் பெருமை

 புதுசா அறிமுகமாகிற சகமனுசனுடனான சந்திப்பில் அவன் சாதிய தேடுற நீ! இணையா பயணிக்கும் மனம் விரும்பும் பெண்ணுடனான இயல்பான காதல அணை போட்டுத் தடுக்குற நீ! நாட்டுக்கு பதக்கம் வாங்கிய விளையாட்டு வீரனின் பிறப்ப இணையத்தில் தோண்டுற நீ! பெத்தமகள அவ இணையோட வெட்டிக் கொலை பண்ணும் சாதி மிருகத்திற்கு – மனசுக்குள் மாலையப் போடுற நீ! ஜில்லாக் கலெக்டரே ஆனாலும் தன் சாதி இல்லன்னா- அவர் திறமையத் தூசியா நெனக்கிற நீ! ஜீன்சிற்கும் கூலிங் கிளாஸிற்கும் மயங்கிடுவாங்கன்னு- பெண்ணை இழிவாக பேசுற நீ! எந்த முயற்சியும் இல்லாம ஓசியில் கிடைச்சிட்ட -சாதிப் பெருமையில் சுகம் காணுற நீ! பல சாதி வியர்வையில உருவான சோற்றைத் தான் திண்ணலாமா? பல பேரு உழைப்பில உருவான துணியத்தான் உடுத்தலாமா? வெறுப்பை விதைக்கிற  மதவாதிப் பேச்சுல கண்மூடிக் கெடக்குற நீ! சாதித் திரைய கொஞ்சம் விலக்கிட்டு பாரு! உழைச்சா தானே உனக்கும் சோறு கொஞ்சம் மனுசனா வாழப் பாரு! https://bookday.in/poem-by-aadhiran-jeeva/

கிராமத்தின் ஒரு மூலையில்

  சூரியன் மறைந்தாலும் அதன்  ஒளி மறையா அந்திமாலை வான்வெளியில் வட்டமிடும் வௌவால்கள்,  கூடுதிரும்பும் இணைமைனாக்கள்,  இளம்தென்னை உரசலோசை,  முந்தாநாள் முடிந்துபோன  சண்டையை மீளக்கொணர  வாசலில் அமர்ந்து  வசைபாடும் பக்கத்துவீட்டு அம்மா,  காற்றிலாடும் வேம்பின் கிளைகளில்  கொஞ்சிப் பேசிடும் பூனைக்குருவிகள்,  நாள்பூரா உழைத்து திரும்பும்  தாயின் அன்பிற்காய் காத்திருக்கும் சீருடைச் சிறுமி,  தூரத்துக் குளமொன்றில்  பெருந்துணியொன்றை அடித்து துவைக்கும் 'தொப்'பெனும் ஓசை,  எல்லாம் 'அழகு' தான் கிராமத்தில். இருந்தும் தவணை முறையில்தான் பிடிக்கிறது கிராமத்தை. ஜாதியை தங்கள் பெருமையென நினைக்கும் பல 'மனித' மனங்களால். ஜாதிவாரி தெரு இருக்கும் கிராமங்களை அழகென்று சொன்னால் அழகுக்கே அது அவமானம். https://bookday.in/kiramaththu-oru-mulaiyil-kavithai-by-aadhiran-jeeva/

எனக்கின்று எப்படி உறக்கம் வரும்?

 எனக்கின்று எப்படி உறக்கம் வரும்? உடை தானே! அவள் விரும்பும்படி கொண்ட நம்பிக்கைப்படி உடுத்தட்டுமே! எனக்கென்ன வந்தது? ஏட்டிக்குப் போட்டியென காவி துண்டணிந்து எதிர்ப்பைக் காட்டியதும்  கூட்டுப் புழுவாக வீட்டிற்குள் அடங்கி இருப்பாள் என முட்டாளாய் இருந்துவிட்டேன். பர்தா அணிந்து பைக்கில் அவள் பறந்தது கண்டு, காவித் துண்டுகளும் ஆரஞ்சுத் தொப்பிகளும் எல்லோருக்கும் வழங்கப்பட்டன... தனியாய் மாட்டிக் கொண்ட ஆட்டுக் குட்டியை கொதறக் காத்திருந்த வெறிநாய் கூட்டத்தில் நானும் ஒருவனானேன்... ஆடல்ல நான் சிங்கமென காட்டி விட்டாள்.. என் மதப் பண்டிகை மட்டும் பள்ளியில் கொண்டாடப் பட்டபோது, தபால் ஆபீஸ் பிள்ளையார் வங்கிப் பிள்ளையார் முளைத்த போது, புதிய திட்டங்கள் வேத பூஜையுடன் தொடங்கியபோது, அமைதிகாத்தானே என் சகோதரன்... நான் அறியேன்... பின்னொரு நாள் நிகழ்த்த இருக்கும் வன்முறை ஆட்டத்திற்கான ஒத்திகை தான் இது என்று... நான் அறியேன்... எனக்கு வழங்கப்பட்ட காவித் துண்டுகளும் ஆரஞ்சு தொப்பிகளும் ஹரித்துவார் மாநாட்டில் ஆர்டர் செய்யப்பட்டவை என்று... என் சொந்த சகோதரர்களை வெறுப்பதற்கான நியாயங்கள் எப்போதும் எங்களுக்கு வழங்கப...

சிகப்பு வண்ண பெயர்கள்

அலைபேசி அழைப்பு வரலாற்றில் பதிலளிக்காமல் தேங்கி நிற்கும் சிகப்பு வண்ண பெயர்களுக்குள் மறைந்துள்ளது.. அந்நியமான அழைப்புகள் பற்றிய அச்சம் 'எதற்கு வம்பு ' எனும் தன்னலம் தான் பரபரப்பான ஆள் எனக் காட்டும் பாசாங்கு சிகப்பு வண்ண பெயர்களுக்குள் மறைந்துள்ளது.. ஆபத்தில் உதவிக்காக நீண்டு கொண்டே இருக்கும் கைகள் ஆறுதல் கோரி விரிந்த அன்பு மனங்கள் புறக்கணிப்பின் கண்ணீரும் ஓலமும்  எங்கோ ஒரு மூலையில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது நீங்கள் அழைத்த நபர் உங்கள் அழைப்பை ஏற்கவில்லை. இளவரசன் ரோஹித் வெமுலா அனிதா நந்தீஸ்- சுவாதி ராஜலட்சுமி காஷ்மீர் ஈழம் யூதன் பாலஸ்தீனம் மணிப்பூர்  இடைவிடாது நீள்கிறது சிகப்பு வண்ண பெயர்களின் பட்டியல். கொஞ்சம் மனிதம் வேண்டும்  சிகப்பு மாறுவதற்கு.