எனக்கின்று எப்படி உறக்கம் வரும்?

 எனக்கின்று எப்படி உறக்கம் வரும்?


உடை தானே!

அவள் விரும்பும்படி கொண்ட நம்பிக்கைப்படி உடுத்தட்டுமே!


எனக்கென்ன வந்தது?


ஏட்டிக்குப் போட்டியென காவி துண்டணிந்து எதிர்ப்பைக் காட்டியதும் 

கூட்டுப் புழுவாக வீட்டிற்குள் அடங்கி இருப்பாள் என முட்டாளாய் இருந்துவிட்டேன்.


பர்தா அணிந்து பைக்கில் அவள் பறந்தது கண்டு,

காவித் துண்டுகளும் ஆரஞ்சுத் தொப்பிகளும் எல்லோருக்கும் வழங்கப்பட்டன...



தனியாய் மாட்டிக் கொண்ட ஆட்டுக் குட்டியை கொதறக் காத்திருந்த வெறிநாய் கூட்டத்தில் நானும் ஒருவனானேன்...


ஆடல்ல நான் சிங்கமென காட்டி விட்டாள்..



என் மதப் பண்டிகை மட்டும் பள்ளியில் கொண்டாடப் பட்டபோது,

தபால் ஆபீஸ் பிள்ளையார் வங்கிப் பிள்ளையார் முளைத்த போது,

புதிய திட்டங்கள் வேத பூஜையுடன் தொடங்கியபோது,


அமைதிகாத்தானே என் சகோதரன்...



நான் அறியேன்...

பின்னொரு நாள் நிகழ்த்த இருக்கும் வன்முறை ஆட்டத்திற்கான ஒத்திகை தான் இது என்று...


நான் அறியேன்...

எனக்கு வழங்கப்பட்ட காவித் துண்டுகளும் ஆரஞ்சு தொப்பிகளும் ஹரித்துவார் மாநாட்டில் ஆர்டர் செய்யப்பட்டவை என்று...


என் சொந்த சகோதரர்களை வெறுப்பதற்கான நியாயங்கள் எப்போதும் எங்களுக்கு வழங்கப்பட்டு வந்தன...






கருத்துகள்