கிராமத்தின் ஒரு மூலையில்
சூரியன் மறைந்தாலும் அதன்
ஒளி மறையா அந்திமாலை
வான்வெளியில் வட்டமிடும் வௌவால்கள்,
கூடுதிரும்பும் இணைமைனாக்கள்,
இளம்தென்னை உரசலோசை,
முந்தாநாள் முடிந்துபோன
சண்டையை மீளக்கொணர
வாசலில் அமர்ந்து
வசைபாடும் பக்கத்துவீட்டு அம்மா,
காற்றிலாடும் வேம்பின் கிளைகளில்
கொஞ்சிப் பேசிடும் பூனைக்குருவிகள்,
நாள்பூரா உழைத்து திரும்பும்
தாயின் அன்பிற்காய் காத்திருக்கும் சீருடைச் சிறுமி,
தூரத்துக் குளமொன்றில்
பெருந்துணியொன்றை அடித்து துவைக்கும் 'தொப்'பெனும் ஓசை,
எல்லாம் 'அழகு' தான் கிராமத்தில்.
இருந்தும் தவணை முறையில்தான் பிடிக்கிறது கிராமத்தை.
ஜாதியை தங்கள் பெருமையென
நினைக்கும் பல 'மனித' மனங்களால்.
ஜாதிவாரி தெரு இருக்கும் கிராமங்களை அழகென்று சொன்னால்
அழகுக்கே அது அவமானம்.
https://bookday.in/kiramaththu-oru-mulaiyil-kavithai-by-aadhiran-jeeva/
கருத்துகள்
கருத்துரையிடுக