அரசியல் சாசனம் - அருங்காட்சியா?

புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் முதன்முதலாக நடைபெற்ற சிறப்பு கூட்டத் தொடர் தொடங்கப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியலமைப்பு சட்டத்தின் 1976 க்கு முந்தைய பதிப்பு (அதாவது முகப்புரையில் மதச்சார்பின்மை, சோசலிசம் உள்ளிட்ட சொற்கள் இணைக்கப்பட்டதற்கு முந்தையது) வழங்கப்பட்டது நாடு முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.


அரசியல் சாசனம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டம் இயற்றும் இடத்தில் அமர்ந்துள்ள மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகையாளர்கள் மட்டும் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு  நூல் என்று  தான் நாமெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.

இந்திய நிலப்பரப்பில் வாழ்கிற எவரும் நூற்றுக் கணக்கான ஆண்டுகளாய், இன்னதென்று அறியாவிட்டாலும் பிறப்பில் பேதம் கற்பிக்கும்  மனு ஸ்மிருதியைத் தான் தங்கள் வாழ்வின் ஒவ்வொரு நடைமுறையிலும் பின்பற்றி வந்திருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

'சாதிக்கொரு நீதி'  வழங்கும் மனு அநீதிக்கு மாற்றாக ' சட்டத்தின் முன் அனைவரும் சமம்' என்று சமத்துவக் கோட்பாட்டை அடியிழையாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்திய அரசியலமைப்பு சட்டம்.

ஆனாலும் 'தேர்தலில் வாக்களிப்பதைத் தவிர ஆற்ற வேண்டிய பணி வேறெதுவுமில்லை' என உழைக்கும் மக்கள்  அரசியலில் இருந்து எவ்வாறு  விலக்கி வைக்கப்பட்டுள்ளார்களோ அதேபோலத்தான் அரசியல் சாசனம் பற்றி அறிவதிலிருந்தும் விலக்கி வைக்கப் பட்டுள்ளார்கள்.

எனவே தங்களை ஆளும் சட்டங்களை இயற்றுவோரை வாக்களித்து தேர்ந்தெடுப்பவர்களாக இருக்கும் உழைக்கும் மக்களே, சட்டம் இயற்றும் இடத்திற்கு வர வேண்டிய காலம் வந்துவிட்டதால் அரசியல் சாசனத்தை எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இதற்கு வழிகாட்டும் கையேடாக வெளிவந்திருக்கும் நூல் தான் நீதியரசர் ஹெச். நாகமோகன்தாஸ் எழுதிய 'Reading the constitution'

ஆதி பொதுவுடமை சமூகம், ஆண்டான்- அடிமை சமுதாயம் , நிலப்பிரபுத்துவ சமூகம், இன்றைய முதலாளிய சமூகம் மற்றும் சோசலிச சமூகம் ஆகியவற்றின் தோற்றம் , தன்மை குறித்து ஓர் அறிமுகத்தோடு துவங்குகிற இந்நூலின் தொடக்க அத்தியாயங்களில் இந்திய வரலாறு, சமூக அமைப்பு, மதம், வழிபாட்டு முறைகள் மற்றும் ஜாதிய அமைப்பு ஆகியவை குறித்து சுருக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் அரசியல் சாசனம் என்று சொல்லப்படுகிற இங்கிலாந்தின் அரசியல் சாசனம், 'எல்லா மனிதரும் சமமாக படைக்கப் பட்டுள்ளார்கள்' என்று முழங்கும் அமெரிக்க அரசியல் சாசனம், சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று பிரகடனம் செய்யும் பிரஞ்சு அரசியல் சாசானம், 

கருத்துகள்